வீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால் கிடைக்கும் அதிர்ஷ்டம் என்ன தெரியுமா?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் வைப்பதால், அந்த வீட்டிற்கு தனி சிறப்பு உள்ளது என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிலும், முக்கியமாக வடக்கு பக்கமாக குறைந்த பட்சம் இரண்டு அடி காலியான இடம் விட்டு காம்பவுண்ட் கட்டும் வீடுகளுக்கு அதிக சிறப்புகள் உண்டு என்று கூறப்படுகிறது.

வடக்கு திசையின் சிறப்பு என்ன?

வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் ஆவார். எனவே குபேர கடாட்சம் வேண்டுமெனில், வீட்டின் வடக்கு திசையில் ஜன்னல் அமைத்து கட்டுவது சிறந்தது.

மஹாபத்மம், பத்மம், சங்கம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலாகர்வம் எனும் ஒன்பது வித நிதிக் குவியல்கள் குபேரனிடம் இருக்கின்றது. இவற்றில் சங்கமம், பத்மம் ஆகிய இரண்டும் கோடீஸ்வர பூதங்கள்.

எனவே நாம் வசிக்கும் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கி இருந்தாலும், வடக்கு திசையில் சூரிய வெளிச்சம் படுமாறு அமைத்து, வடக்கு திசையில் ஜன்னலையும் அமைக்க வேண்டும்.

குபேரனின் திசையான வடக்கு திசையில், பணம் உள்ள பெட்டியை வைப்பதால், நம் வீட்டின் செல்வம் அதிகரிக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்