வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க இதை கண்டிப்பாக செய்யுங்கள்!

நம் வீட்டின் செல்வ வளத்தை இரண்டு மடங்காக அதிகரிக்க ஒருசில செயல்பாடுகளை சரியாக பின்பற்றி வந்தாலே போதும் நல்ல மாற்றங்களை காணலாம்.

செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய வேண்டியவை?

பணத்தை கொடுக்கும் போது அல்லது வாங்கும் போது, அடர் நிறத்தில் உள்ள ஆடைகளை அணியக் கூடாது. லைட் கலர்ஸ் ஆடைகளை அணிய வேண்டும்.

உறங்கும் போது வடக்கு நோக்கி தலை வைப்பதை தவிர்த்து, மேற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும்.
பூஜை அறையில் 2 கடவுளின் சிலைகளை எதிரெதிரே வைத்தல், உடைந்த சிலை, கிழிந்த கடவுளின் படங்கள் போன்றவற்றை வைக்கக் கூடாது.

தெற்கு திசையில் கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் சுவற்றில் மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை, அலசிய துணியின் தண்ணீர், துடைப்பத்தின் புழுதி, முற்றத்தின் காற்று ஆகியவை நம் உடலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால், வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் வைத்திருக்க வேண்டும். இதனால் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

வீட்டில் 3 நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிவதும், உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்க விடவும் கூடாது.

வீட்டில் உள்ள கண்ணாடி சதுரம் அல்லது செவ்வக வடிவில் இருப்பதுடன், வடக்கு-கிழக்கு திசையில், தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடியை வைக்க வேண்டும்.

லட்சுமி தேவியின் அடையாளமான பால், தேன், தாமரை, தானியக்கதிர், ஆகியவை வீட்டில் எப்போதும் இருக்க வேண்டும். குறிப்பாக நாணயங்களை வெள்ளிக் கிண்ணத்தில் வைக்க வேண்டும்.

வீட்டில் வெள்ளிக்கிழமை அன்று மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்து முக குத்துவிளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

வீட்டின் முன் மற்றும் பின் பகுதியில் வாடிய செடிகள் அல்லது முட்கள் உள்ள செடிகளை வைக்க கூடாது.

மல்லிகைப்பூ, ஏலக்காய் ,பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றை வெள்ளிக் கிழமைகளில் காலை சூரிய உதயத்தின் போது பணப் பெட்டியில் வைக்க வேண்டும்.

வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது.

சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக் கூடாது.

வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு நோக்கியும், துணை விளக்கு வடக்கு பார்த்தும் இருக்க வேண்டும்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கும் போது, தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைக்க வேண்டும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்