முருங்கை பூ வில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மைகள்!

முருங்கை மரத்தின் இலை, பூ, காய் அனைத்துமே மருத்துவ குணங்களை கொண்டது, கொத்து கொத்தாக மரங்களில் பூத்துக்குலுங்கும் முருங்கைப் பூ தாய்மார்களுக்கும், ஆண்களுக்கும் அதிக பலனை வழங்கக்கூடியது.

முருங்கைப்பூவை வெயிலில் உலர்த்தி தூளாக்கி கொள்ள வேண்டும், இதனை தினமும் இருவேளை வீதம் தண்ணீரில் கலந்து சுட வைத்து குடித்து வந்தால் தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி பிரச்சனைகள் சரியாகும்.

அதுமட்டுமின்றி பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, அதீத கோபத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும், தீமை செய்யும் கிருமிகளை வெளியேற்றும்.

முருங்கைப்பூக்களை பாலில் கலந்து நன்கு சுண்டக் காய்ச்சி பனங்கற்கண்டு கலந்து பருகிவர கண்பார்வை குறைபாடுகள் நீங்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகிவர ஞாபக மறதி சரியாகும்.

மேலும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும், சோர்வான உடல் புத்துயிர் பெற்று இளமையாக ஜொலிக்கலாம்.

முருங்கைப்பூக்களுடன் கடுகு, பூண்டு, வெங்காயம் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் சுரக்கும், ஆண்களின் உயிரணுக்களையும் அதிகரிக்கச் செய்யும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்