செய்தித்தாளில் எண்ணெய் உணவை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் மிகுந்த உணவுப் பொருட்களை செய்தித்தாளில் வைத்து சாப்பிடுவதால் பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

செய்தித்தாளில் எண்ணெய் உணவை வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்?

செய்தித்தாளில் வைத்து சாப்பிடுதல், கைகழுவிய பின் துடைப்பதற்கு பழைய செய்தித் தாள்களை பயன்படுத்துவது இது போன்ற பழக்கங்களை முற்றிலும் தவர்ப்பது மிகவும் நல்லது.

ஏனெனில் செய்தித்தாளின் அச்சு மையில் காரீயம் உள்ளது. இது நம் உடலுக்குள் சென்று பல்வேறு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அதுவும் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பலகாரங்களில் இருக்கும் எண்ணெய்யை வெளியேற்ற செய்தித்தாள்களை பயன்படுத்தும் போது, அதிலுள்ள காரீயம் நேரடியாக உணவுக் குழாய்க்குள் சென்றுவிடும்.

அதனால் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மற்றும் தசைகளின் வளர்ச்சி போன்றவை அதிக பாதிப்புக்குள்ளாகும்.

செய்தித்தாளில் உள்ள காரீயம் தொடர்ந்து நம் உடலுக்குள் சேர்ந்து கொண்டிருந்தால், நுரையீரல் பாதிப்பு போன்ற பல்வேறு உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேரிடும்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்