பாவக்காய் ஜூஸுடன், கேரட் ஜூஸ் சேர்த்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

இந்த காலத்தில் எதற்கு செலவு செய்கிறோமோ இல்லையோ மாதந்தோறும் மருத்துவமனைக்கு என்று தனியாக பணத்தை ஒதுக்கி வைத்துக் கொள்கின்றோம். ஏனெனில், இப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் மருத்துவரை அணுகுகின்றனர்.

உங்களுக்குத் தெரியுமா கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குடிக்கும் போது 8 தேக ஆரோக்கிய பலன்கள கிடைக்குமாம். அட ஆமாங்க, தினமும் காலையில் 3 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் பாவக்காய் ஜூஸ் சேர்த்து சிறிது தேன் கலந்து குடிப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 2 மாதத்திற்கு குடிக்க வேண்டும்.

உடல் எடை குறைக்க உதவுகிறது : கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் இரண்டையும் ஒன்றாக சேர்த்துக் குடிப்பதால் அதிகப்படியாக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலிற்குக் கிடைக்கிறது. அது உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.

வயிற்றை சுத்தமாக்குகிறது இந்த இயற்கை ஜூஸில் உள்ள என்சைம்கள் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, நச்சுக்களை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்கிறது.

அலர்ஜிகளை சரி செய்யும் இந்த ஜூஸ் கலவையில் அதிக அளவில் அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது சரும அழற்ஜிகளான தடுப்புகள் மற்றும் படை போன்றவற்றை தடுத்துவிடும்.

கண் பார்வைக்கு வலிமை சேர்க்கும் இந்த இயற்கை ஜூஸில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண் பார்வை நரம்புகளுக்கு வலிமை சேர்த்து கண் பார்வை மேம்படவும் அதன் வலிமைக் குறையாமலும் இருக்க உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது கேரட் ஜூஸ் மற்றும் பாவக்காய் ஜூஸ் கலவையில் பீட்டா கரோட்டின் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை வெளியேற்றிவிடும்

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது இந்த ஜூஸில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது இரத்த தமனிகளை விரிவடையச் செய்கிறது. இதனால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப் படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது இந்த ஜூஸில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் இரத்த சிவப்பு செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால், இரத்த சிவப்பு செல்கள் நோய் கிருமிகளோடு எதிர்த்துப் போராடுகிறது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

நீரிழிவு நோயைக் குணப்படுத்துகிறது பாவக்காய் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை நீக்கி விடுகிறது. நீரிழிவு நோயின் சில அறிகுறிகளுக்கும் ஏற்ற சிகிச்சையாக உள்ளது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.