குழந்தைகள் மற்றும் பெரியவா்கள் தீய சக்திகளில் இருந்து மீள சுபமந்திரம் !

நம் குழந்தைகள் பயந்து அழும், நாளுக்கு நாள் உடல் நலம் குன்றிடும். மற்றும் பெரியவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி,துஷ்ட ஆவிகளால் அல்லல் உறுபவர்கள் மீண்டிட, இச் சுபமந்திரத்தை சித்தி செய்து கொண்டு, ஜலத்தை கையிலெடுத்து இம் மந்திரத்தை மும்முறை சொல்லி முகத்தைக் கழுவ பீடைகள் விட்டோடிடும்.

சித்தியாவதற்கு கீழ்வரும் மந்திரத்தை, வினாயகப் பெருமானை த்யானம் செய்ய வேண்டும்.

ஐங்கரத்தோனே எவ்வித இடையூறுமின்றி மந்திர சித்தி அருள துணைபுரியங்களென்று.

நாள் 1க்கு நூறு உரு துளசி மணி மாலையால் கொடுக்க வேண்டும் நூறு நாளைக்கு.

சுப மந்திரம்

ஹரிஓம் ஹரிஹரி ஆதிமூலமே

ஆண்டவா வாவா, நரசிம்ம ரூபநாராயணா வாவா,

துஷ்டரை துரத்தி இஷ்டரை காக்கும்

துளசிமார்பாயுனை துதித்தேன் நம ஓம்

என்று உரு கொடுத்து சித்தியாக்கி பலன் பெறலாம்.

ஸ்ரீ பொய்யா ஜெயசக்தி கஜமுக கந்தவேல் துணை..! பிறரை எதிர்பாராதபடி தங்களுக்கு ஏற்பட்ட, ஏற்படவிருக்கின்ற தீவினைகளிலிருந்து விடுபடுவதற்கான சுலபமான பூஜா வழிமுறைகளை, யாம் எமது மூதாதையரிடம் பயின்று அனுபவத்தில் நற்பலன் கண்டதை, இதன் விபரமறியா நம் சகோதரர்கள், சகோதரிகளின் சந்ததிகளின் எதிர்கால வாழ்க்கைக்குக் கவசமாக இருக்குமென்று ஆரம்பித்துள்ளேன்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்