ஆடி அமாவாசையில் திதி கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்!

மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று இறந்த நம் முன்னோர்களுக்கு விரதம் இருப்பது சிறந்த நாட்களாகும்.

அவற்றில் தை, ஆடி, புரட்டாசி போன்ற மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் முக்கியத்தும் கொண்டவை. அதிலும் ஆடி அமாவாசை மட்டும் மிகவும் சிறப்பானதாகும்.

ஆடி அமாவாசை சிறப்பானது ஏன்?

ஆடி மாதத்தில் சந்திரன் உச்சம் பெற்று கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதால், சிவ அம்சமான சூரியனும், சக்தியின் அம்சம் பெற்ற சந்திரனும் ஆடி அமாவாசை அன்று ஒன்றிணையும். அதனால் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது

ஆடி அமாவாசையில் திதி கொடுக்கலாமா?

சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றிணையும் புனிதமான ஆடி அமாவாசை அன்று இறந்த நம் முன்னோர்களுக்கு திதி கொடுத்து புண்ணிய நதிகள், கடல் போன்ற நதிகளில் நீராடி, இஷ்ட தெய்வங்களை வழிப்பட்டு, அன்னதானம் போன்றவை செய்தால், நம்மிடம் உள்ள பாவங்கள் விலகி, புண்ணியங்கள் சேரும்.

ஆடி அமாவாசையில் விரதம் இருப்பது எப்படி?

ஆடி அமாவாசை அன்று அதிகாலையில் எழுந்து அருகில் உள்ள கடல், ஆறு போன்ற நீர்நிலைக்கு சென்று குளித்து விட்டு இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

அதன் பின் முதியவர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். பெண்கள் காலை உணவை சாப்பிடாமல், இறந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை செய்ய வேண்டும். விரதத்திற்கு சமைக்கும் உணவில் அனைத்து விதமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம்.

இறந்த முன்னோர்களின் எண்ணிக்கையை பொருத்து, இலைகளை போட்டு சமைத்த உணவு மற்றும் துணிகளை வைத்து அகல் விளக்கேற்றி, தீபம் காட்டி, வணங்கி விட்டு, அந்த உணவுகளை காகத்திற்கும் படைக்க வேண்டும். அதன் பின் பசுவிற்கு அகத்திக்கீரையை கொடுக்க வேண்டும்.

இந்த விரத வழிப்பாட்டினால், முன்னோர் செய்த பாவ வினைகள் நீங்கி, அவர்களின் ஆசி உங்களுக்கு கிடைக்கும். அதோடு விரதம் இருப்பவர்களின் ஆயுள் பலம் அதிகரிக்கும்.

– இந்த தகவலை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.