Monthly Archives: September 2017

திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம்!

1.திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். 2. இரு மூலவர்களில் கருவறையில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார். 3. சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன் கை வேலினால் முருகன் நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது. 4. திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு… Read More »

சொந்த வீட்டில் சுகமாய் வாழ என்ன செய்ய வேண்டும்?

வீட்டை கட்டிப் பார் கல்யாணத்தை முடித்து பார் என்று முன்பெல்லாம் சொல்வார்கள். பிரம்ம பிரயத்தனம் செய்துதான் அப்போது வீடு கட்ட வேண்டியிருக்கும். ஆனால் தற்போது எல்லாம் சுலபமாகவே நடந்து விடுகின்றது. வங்கிக் கடன், அந்தக் கடன் இந்தக் கடன் என பலவகையான கடன்களை வாங்கி பில்டர்களிடம் பணத்தைக் கொடுத்தால் போதும். மீதி விஷயத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். தனி வீடு என்பது குதிரைக் கொம்பாகிவிட்ட நிலையில், நகரத்துக்கு உள்ளே அல்லது புறநகர்ப் பகுதியென்று அவரவர் வசதிக்கு ஏற்ப… Read More »

உங்களுக்கும் இந்த ஃபோபியா இருக்கலாம்! – அச்சத்தின் உச்சம்!

நாம் அனைவருக்கும் அச்ச உணர்வு என்பது பொதுவானது. வாழ்நாள் முழுவதும் ஏதோ ஒன்றைப் பார்த்து நாம் பயந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஃபோபியா என்பது பயத்தில் இருந்து சிறிது மாறு பட்டது, அதீதமான அச்ச உணர்வே ஃபோபியா எனப்படுகிறது, நம்மில் பலருக்கும் நம்மையே அறியாமல், இதுதான் ஃபோபியாவா என்று நமக்கே தெரியாமல் நமக்குள் பல பயங்கள், அதாவது இதயத்தையே உறைய வைக்கின்ற அளவிற்கான பயங்கள் மறைந்து கிடக்கின்றன. அதில் சிலவற்றை இங்குப் பார்ப்போம். 1.பாதோஃபோபியா (Bathophobia): ஆழத்தின் மீதுள்ள… Read More »

2 வாரம்.. தினமும் 2 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!

பேரிச்சம் பழத்தில் விட்டமின் B6, B12, மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. அத்தகைய பேரிச்சம்பழத்தை 14 நாட்கள் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால், உடலின் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ! * தினமும் இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானம், வாயுத் தொல்லைகள், பெருங்குடல் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. * பேரிச்சம்பழத்தில் இருக்கும் மெக்னீசியம், ஒரு சிறந்த அழற்சி எதிர்ப்பு பொருளாக உள்ளதால், அது சிறந்த ஒரு வலி… Read More »

விரைவில் குழந்தை பாக்கியம் பெற இயற்கை வைத்தியம்!

மாதவிலக்கு கோளாறுதான் குழந்தை பேறு தள்ளி போக காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை வைத்திய முறைகள் உள்ளது. அது குறித்து பார்க்கலாம். இப்ப எல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம் என்றால் அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு இயற்கை… Read More »

ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டுமா?

உழைப்பிற்கு ஏற்ற உணவை சாப்பிடும் முறையை கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே போதுமானது உடல் எடையை கட்டுப்படுத்த. இன்று பெரும்பாலும் உடல் எடை அதிகரிக்க காரணமாக இருப்பது உட்கார்ந்தே வேலை செய்யும் முறை தான். ஒரு அங்குலம் கூட நகராமல், காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் அமர்ந்தவாறு வேலை செய்கிறோம். ஆனால், உணவு மட்டும் அதே அளவு கலோரிகள் குறையாமல் உட்கொள்கிறோம். இதனால் கலோரிகள் கரையாமல் உடலில் கொழுப்பாக மாறி உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. டயட்… Read More »