Monthly Archives: July 2017

முக்கியமான 20 வீட்டு பூஜை குறிப்புகள்!

1. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும். 2. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும். 3. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி… Read More »

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது!

அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன! செப்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து மடிகின்றன. ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன. பித்தளை பாத்திரத்தில் 4 நாட்கள் உயிர் வாழ்கின்றன. ரத்தத்தில் செப்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. இ-கோலி பாக்டீரியாவைக் கொல்லும் திறன், செப்பு… Read More »

சிவப்பு முள்ளங்கியின் அற்புதமான மருத்துவ நன்மைகள்!

இதயத்தின் நண்பன்: இதயத்தை நலமாக வைத்திருக்க விரும்புபவர்கள் சிவப்பு முள்ளங்கியை அதிகம் உட்கொள்ள வேண்டும். இதில் உள்ள எரிச்சலுக்கு எதிரான தன்மை இதயம் தொடர்பான வியாதிகளை தவிர்க்கிறது. ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி ஆகியவைகளையும் கொண்டிருப்பதால் இதய மண்டலத்தை பாதுகாக்கும் அரணாக சிவப்பு முள்ளங்கி உள்ளது. புற்றுநோய் தடுப்பு: சிவப்பு முள்ளங்கியில் அதிகளவில் உள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்கள் மற்றும் பைட்டோ ஊட்டச்சத்துக்கள் புற்று நோய் வராமல் தவிர்க்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. சிவப்பு முள்ளங்கி தாவரத்தின் கூட்டமைப்பு, குளுக்கோஸினோலேட்… Read More »

கோவிலில் பிரகாரத்தை வலம் வரும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை!

• கோவில் பிராகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது. • கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது. • வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது. • கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது. • சோம்பல் முறித்தல், தலை விரித்துப் போட்டு கொண்டு செல்லுதல், வெற்றிலை பாக்கு போடுதல் கூடாது. • பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் செல்லவதை தவிர்க்கலாம். • போகின்ற போக்கில் ஒரு கையால் வணங்கி… Read More »

குழந்தைகளை அடிக்காமலே நல்வழிபடுத்தலாம்!

குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை…! 1. குழந்தை தவறை திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக் கூடாது. 2. தண்டனையின் அளவு குற்றத்தைப் பொறுத்ததாக இருக்க வேண்டும். மாறாக பெற்றோரின் மன நிலையைப் பொறுத்ததாக இருக்கக் கூடாது. 3. தண்டனை குழந்தை செய்த தவறைப் புரிய வைப்பதாக இருக்க வேண்டும். உடலைக் காயப்படுத்துவதாக அமையக் கூடாது. 4. தண்டித்த உடனே பாசத்தைக் காட்டாது, குழந்தை தன தவறைப்… Read More »

ஏழரை சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா?

திருமணம்….! ஆயிரம் காலத்து பயிராம். நான் சொல்லலை. பெயர் தெரியாத யாரோ ஒரு பெரியவர் சொன்னது. திருமணம்…! இருமனம் ஒன்றிணையும் ஒப்பந்த விழா. தேவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிமார்களும், கிண்ணர்கள், கிம்புருடர்கள் பூமாரி பொழிய, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து, பெற்றோர் பெரியோர் ஆசியுடன் வாழ்க்கை படிகளில் கால் வைக்கும் இனிய பொன்னாள். இதற்கு பின் தான், இனிய இல்லறம் பிறக்க வேண்டும். தம்பதிகளுக்கு இடையே சந்தோசம் திளைக்க வேண்டும். வம்சம் தழைக்க… Read More »

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்காத நன்மைகள்!

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது. இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம்… Read More »

தக்காளியால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

தக்காளி இல்லாத சமையலா, அது ருசிக்காது என்பது பலரது கருத்து. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை என்பதும் உண்மை. சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது இந்த தக்காளி. இது ஒரு காய்கறி செடியினமாகும். தக்காளியின் பயன்கள் தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட்டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய… Read More »

தார தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?

சில ஆண்களுக்கு ஜாதக ரீதியாக தாரதோஷம் ஏற்படுவதுண்டு. செவ்வாயினால் உண்டாகும் இந்த தோஷத்திற்காக, வாழை மரத்தை வெட்டும் பரிகாரம் செய்யும்படி ஜோதிடர்கள் சொல்வர். வாழையை தாரமாகக் கருதி வெட்டுவதால் மட்டும் தோஷம் நீங்கி விடுவதில்லை. இதெல்லாம் மனதிருப்திக்காக செய்யப்படும் வெறும் சடங்கு மட்டுமே. “பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை’ என்பதை மனதில் கொள்ள வேண்டும். செவ்வாயால் உண்டாகும் எந்த தோஷமாக இருந்தாலும் அதற்கு முருகவழிபாடே மிகச்சிறந்தவழி. அருணகிரிநாதர் போன்ற அருளாளர்கள், “”முன்செய்த பழிக்குத்துணை முருகா எனும் நாமம்’என்றுநமக்கு… Read More »

ருத்ராட்ச முகங்களும் அதனுடைய சிறப்புகளும்!

சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்று சிவபெருமானின் முக்கண்கள். ஈசன் தவத்தில் இருந்தபோது அவன் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரே ருத்ராட்ச மரமாக தோன்றியது. சிப்பிக்குள் முத்தாக தோன்றும் மழைதுளியை போல, சிவபெருமானின் முத்து முத்தான கண்ணீரால் தோன்றியதே ருத்ராட்சம். ருத்ராட்சத்தை அணிபவர்கள் ருத்ரனின் அம்சம். ருத்ராட்சத்தை அணிந்தவர்களின் கண்களில் துன்ப கண்ணீர் வருவதில்லை. ஆபத்துகளில் இருந்து நம்மை தடுத்து காப்பதால் இறைவனை நினைத்து நம் கண்களில் வருவது ஆனந்த கண்ணீர்தான். துன்பம் தூர ஒடி விடும். ருத்ராட்சத்தை… Read More »