Author Archives: admin

இந்த 4 சித்த வைத்திய குறிப்புகள் உங்க நரைமுடிக்கு தீர்வு தரும்!

நரை முடி இந்த காலகட்டத்தில் ஒரு பேஷன் என்று கருதப்படுகிறது. கருப்பும் வெள்ளையும் கலந்த சால்ட் அண்ட் பெப்பர் லுக் இப்போது பரவலாக நடைமுறையில் இருக்கும் ஒரு ஸ்டைலாகும் . பிரபல நடிகர்கள் கூட தற்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடன் நடமாடுகின்றனர் . நரை முடியை பிடிக்காதவர்கள் அதனை போக்க பல முயற்சிகளை செய்வர். அல்லது ரசாயன டை பயன்படுத்த தொடங்குவர். ஆனால் நமது இயற்கை முறை தீர்வுகளால் நரையை மறைத்து முடிக்கு கருமை நிறத்தை… Read More »

நீளமான முடி வளர்ச்சிக்கு பால் செய்யும் அற்புதங்கள்!

எந்தப் பொருளையும் ஆரோக்கியமாக அழகாக பராமரிக்க வேண்டும் என்றால் நீங்கள் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். அழகை பராமரிக்க என்றால் எல்லாரும் சருமத்தை மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால் கவனிக்க மறந்துவிடுகிற ஓன்று தலைமுடி. தலைமுடியில் ஏதேனும் பிரச்சனை ஏற்ப்பட்டால், மாற்றங்கள் ஏற்ப்பட்டால் மட்டுமே தலைமுடியை கவனிக்கிறோம். நிறைய வேலைகள் இழுக்கும் என்றே பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறோம். அதோடு அதிக செலவாகுமே என்ற பயமும் இருக்கும். இனி அந்தக் கவலை எதுவும் தேவையில்லை. வீட்டிலிருக்கும் ஒரு பொருளைக்கொண்டு… Read More »

வெங்காயத்தை பயன்படுத்தி நோய்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு!

தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும். சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிட செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும். காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து… Read More »

முடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்காய் தைலம்!

பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இது அவர்களுக்கு மன உலைச்சலையும் ஏற்படுத்துகிறது. முடி அதிகம் கொட்டுகிறதே என்று கவலைப்பட்டால் இன்னும் தான் முடி கொட்டும். கவலையை நிறுத்தி, இந்த நெல்லிக்காய் தைலத்தைத் தலையில் தேயுங்கள். மாயாஜாலம் நிகழும். பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை – தலா 100 கிராம் எடுங்கள். நான்கையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.… Read More »

பேரீச்சம்பழத்தோடு தேன் கலந்து சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் பேரீச்சம். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத்… Read More »

விரல் முட்டி கருப்பா இருக்கா? சூப்பராக மாத்த எளிய வழிகள்?

இறந்த இரத்த செல்கள் அதிகமாக உடலில் சேர்வது. இவையெல்லாம் தான் கைகள் கருப்பாக மாறுவதற்கான காரணங்கள். இப்பொழுது கருப்பான விரல்களை சரி செய்வதற்கான எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள் இந்த காலத்தில் இவ்வாறு கைகள் கருத்து போவது என்பது பலர் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு ஏற்படுகின்றது என்றால் அதிக அக்கறை நம் கைக்குத் தேவைப்படுகின்றது என்று அர்த்தம். இவ்வாறு கைகள் கருத்து போவதற்கான காரணம்… Read More »

மதியம் தூங்குபவரா நீங்கள்? அவசியம் படியுங்கள்!

மதியம் தூங்குபவரா நீங்கள்? இந்த நோய்க்கான அபாயம் உண்டு எச்சரிக்கை!! நிறைய பேர் மத்தியானம் ஆனதுமே கண்கள் சுழற்றி தூக்கம் போடுவார்கள். அரை மணி நேர தூக்கம் என்றால் பாதகமில்லை. ஆனல் 40 நிமிடங்களுக்கும் மேலாக தூங்கக் கூடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சில பெண்கள் மதியம் தூங்குவதை ஒரு வேலையாகவே செய்வார்கள். அவர்கள் இந்த கட்டுரையைப் பற்றி முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும். உடல் வேலைகளால் அலுப்பு வரும்போது மதியம் தூங்கும் குட்டித் தூக்கம்… Read More »

உங்கள் மனைவி எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ள ஆசையா?

ஒருவருக்கு காதல் ஒருமுறை தான் பூக்கும் என்பதெல்லாம் வெறும் பொய். சிலருக்கு காதல் பலமுறை பூக்கும். ஆனால் பலரும் அதை வெளிப்படையாக சொல்லிக் கொள்வதில்லை. கைரேகை ஜோதிடத்தின் படி, பலமுறை காதல் மலர்ந்தவர்களை எளிதில் கண்டறிய முடியும். நம் கையில் உள்ள சில ரேகைகள் ஒருவரது மோகத்தன்மை அல்லது கடலைப்போடும் குணத்தை வெளிக்காட்டும். கைரேகை ஜோதிடர்கள், ஒருவரது கை ரேகைகளைப் பார்த்தே இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் நடக்கப் போவதைக் கணித்துக் கூறுவார்கள். இப்படி… Read More »

மச்சம் இந்த இடத்தில் இருந்தால் செல்வம் கொட்டுமாம்!

உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய வந்தது. இந்து ஜோதிடத்தில், மச்சம் இருக்கும் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மச்சம் இருக்கும் இடம் ஒருவரது வெற்றி மற்றும் தோல்விகளைப் பற்றி சொல்லும் என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி, இந்த மச்சம் ஒருவரது அதிர்ஷ்டத்தைப் பற்றியும் கூறும். இப்போது நாம் உடலின்… Read More »

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை ஈஸியா சரிசெய்யலாம்!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை… Read More »